தற்கொலை செய்துகொள்ளும் எண்ணமுடையவர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். மாறாக, நாட்டிற்கு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அமனாவின் போராட்டத்தில் பங்கேற்குமாறு பார்டி அமனா நெகாரா (அமனா) தலைவர் முகம்மட் சாபு கேட்டுக்கொண்டார்.
நமக்கு அக்டோபர் 27 (தற்கொலை நோக்கம் கொண்ட) சம்பவம், விலைவாசி உயர்வால் ஏற்படும் மன அழுத்தம், மீண்டும் வேண்டாம்.
வாழ்க்கைச் செலவின உயர்வால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தாம் தற்கொலை செய்து கொள்வதாக ஒருவர் பினாங்கு பாலத்திலிருந்து குதிப்பதற்கு முன்னதாக தமது முகநூலில் பதிவு செய்திருந்த சம்பவத்தை மாட் சாபு குறிப்பிட்டார்.
“நீங்கள் அவ்வாறு செய்யும் எண்ணம் கொண்டிருந்தால், நம்பிக்கை இழக்காதீர். மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் வீண்செலவு செய்வதோடு பேராசை பிடித்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும் எங்களுடன் இருங்கள்” என்று இன்று அமனா மாநாட்டில் முக்கிய உரையாற்றிய அவர் கூறினார்.
நான் ரெடி..
நாம் எங்கே அவர்களைக் கவிழ்ப்பது! அவர்கள் தான் பொது மக்களைக் கவிழ்க்கிறார்களே!
சிறந்த மனிதர் ஐயா மாட் சாபு அவர்கள் , காலம் சென்ற தோக்குரு நிக் அஸீஸ் அவர்களின் நெறிகளை கடை பிடிக்க வேண்டும் !
இது நடக்கும் ஆனால் நடக்காது– அம்னோ நாதாரிகள் எப்போது சிந்திக்கும் திறன் பெறுவார்கள்–இன வெறி மத வெறியை தூண்டி விடாமல் நியாயமாக நடப்பார்கள்? நம்பிக்கை நாயகன் ரொஹின்யாவுக்கு வக்காலத்து வாங்கி தன்னுடைய முஸ்லீம் தீவிர வாத அடையாளத்தை நிலை நிறுத்திக்கொண்டு பெரிய நாடகம் அரங்கேற்றுகிறான்.