அரசிலமைப்பில் ஓராங் அஸ்லிகள் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்

limஅரசியலமைப்பில்     திருத்தம்    செய்து    ஓராங்   அஸ்லி   மக்கள்    மலாய்க்காரர்களுக்கும்    மற்ற   பூமிபுத்ராக்களுக்கும்  இணையாக  சலுகைகளைப்   பெறுவதற்கு   வழிகோல    வேண்டும்    என   டிஏபி   வலியுறுத்துகிறது.

அது  ஓராங்   அஸ்லி   மக்கள்   கல்வி,   பொதுச்  சேவை,  உதவிச்  சம்பளம்,   வர்த்தகம்,   பாதுகாக்கப்பட்ட   நிலப்  பகுதி    போன்ற   துறைகளில்  பல்வேறு   சலுகைகள்  பெறுவதற்கு   வாய்ப்பளிக்கும்  என    டிஏபி    நாடாளுமன்றத்    தலைவர்   லிம்  கிட்  சியாங்   இன்று  ஓர்     அறிக்கையில்     கூறினார்.

மலேசியாவின்  “ஆதிவாசிகள்,  முதலாவது  பூமிபுத்ராக்கள்”   என்றால்   அது  ஓராங்    அஸ்லிகள்தாம்   என்று  குறிப்பிட்ட   லிம்,    அவர்கள்    தொடக்கத்திலிருந்தே   ஓரங்கட்டப்பட்டும்   புறக்கணிக்கப்பட்டும்   வந்திருக்கிறார்கள்   என்றார்.

“ஆயிரக்கணக்கான     ஆண்டுகளாக     அவர்கள்   இங்கு    வசித்து   வருகிறார்கள்    என்றாலும்   இன்றும்   அதிகாரிகளால்    நியாயமாக     நடத்தப்படுவதில்லை.

“சலுகைகள்   என்று  பார்த்தால்  அப்படிப்பட்ட    சிறப்பைப்  பெற    ஓராங்  அஸ்லிகளைவிட    தகுதியானவர்     வேறு   எவருமில்லை”,  என்றாரவர்.