பாதுகாப்புக் குற்ற (சிறப்பு நடவடிக்கை)ச் சட்டத்தின்(சோஸ்மா)கீழ் பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா கைது செய்யப்பட்டதற்கு அமைச்சரவை காரணமல்ல என்று சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அசீஸ் கூறினார்.
அது முழுக்க முழுக்க போலீஸ் செய்த முடிவு என அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான அவர் இன்று த ஸ்டாருக்கு வழங்கிய நேர்காணலில் கூறினார்.
“அரசாங்கத்துக்கும் அமைச்சரவைக்கும் அது குறித்து எதுவும் தெரியாது. நாங்கள் முடிவெடுப்பதாக இருந்தால், நிச்சயமாக அவரை சோஸ்மாவின்கீழ் கைது செய்திருக்க மாட்டோம்”, என்றாரவர்.
மரியா பெர்சே பேரணி 5 நடைபெறுவதற்கு முதல் நாள் கைது செய்யப்பட்டார்.
டேய் வெங்காயம் யாருக்குடா காத்து குத்துரே?
பண்றது எல்லாம் பண்ணிவிட்டு இப்போது நல்ல பிள்ளையா காட்டுரேயா? அம்னோ நாதாரிகளிடம் போய் சொல்லு.
மரியா பயமுறுத்த PENDEK KATA-ரோஸ்மா சொல்லித்தான் சோஸ்மாவை பயன்படுத்தி இருப்பது கூடவா மக்களுக்கு தெரியாது என்று நினைக்கிறீர்கள்.