வரும் திங்கட்கிழமை இரவு பாஸ் கட்சி ஒரு “மெகா” எதிர்க்கட்சி செராமா நடத்துகிறது. அதில் பிகேஆரும் பெர்சத்துவும் பங்கேற்கின்றன. இச்செராமா பெர்சத்துவை பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் சேர்ப்பது குறித்து நடத்தப்படும் கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சி பாயா ஜாராஸ் பசார் மாலம் திடலில் இரவு மணி 9.00 க்குத் தொடங்குகிறது.
பாஸ் கட்சியுடன் அரசியல் உறவுகளுடைய கட்சிகள் மட்டுமே இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாக பாஸ் கட்சியின் உதவித் தலைவரும் சிலாங்கூர் பாஸ் ஆணையருமான இஸ்கந்தர் சாமாட் கூறினார்.
இதற்கு முன்னதாகவும் எங்களுடைய செராமாவுக்கு பிகேஆர், இக்கத்தான் மற்றும் பெர்சத்து ஆகிய கட்சிய்களை அழைத்துள்ளோம். இது ஒன்றும் புதிதல்ல என்றாரவர்.
இச்செராமாவுக்கு டிஎபியும் அமனாவும் அழைக்கப்படவில்லை.
கடந்த பொதுத் தேத்தலில் டி எ பி இல்லாமல் ஆணியையே புடிங்கி இருக்க முடியாது இந்த ரெண்டும் கேட்டான் பா சால்.