மாணவர்களைப் பாராட்ட வேண்டும் தண்டிக்கக் கூடாது: யுஎம்முக்கு பிகேஆர் உதவித் தலைவர் அறிவுறுத்து

nurulமலாயாப்     பல்கலைக்கழகம் (யுஎம்)   தங்காப் எம்ஓ1   பேரணியில்  கலந்துகொண்ட    நான்கு    மாணவர்கள்மீது   எடுக்கப்பட்ட     நடவடிக்கையை  மீட்டுக்கொள்ள   வேண்டும்   என்று    வலியுறுத்தப்பட்டுள்ளது.

தண்டிப்பதற்குப்  பதில்   மாணவர்களின்   செயலை     எண்ணிப்  பல்கலைகழகம்   பெருமை   கொள்ள    வேண்டும்    என  பிகேஆர்    உதவித்   தலைவர்   நுருல்   இஸ்ஸா    அன்வார்   கூறினார்.

“அம்மாணவர்கள்   (தங்காப்எம் ஓ1)   பேரணியில்   கலந்துகொண்டதற்காக   மனித  உரிமை  விருது    பெற்றிருப்பது    பல்கலைக்கழகத்துக்குத்    தெரியாதா?

“ஒரு  ஊழல்   விவகாரத்தை     மையநீரோட்ட    கவனத்துக்குக்  கொண்டு  வந்ததில்   மாணவர்கள்    கண்ட   வெற்றியை   அப் பல்கலைக்கழகம்    தனது   வெற்றியாகவும்   கருத    வேண்டும்.

“அந்த   வகையில்  மாணவர்    செயல்பாடுகளுக்குத்    தடைபோடும்      ஒழுங்கு   நடவடிக்கைகளை   உடனடியாக    நிறுத்தும்படி    பல்கலைக்கழக   நிர்வாகத்தைக்   கேட்டுக்கொள்கிறேன்”,  என    நுருல்   நேற்று   ஓர்    அறிக்கையில்   குறிப்பிட்டிருந்தார்.