முன்னாள் சட்ட அமைச்சர் சைட் இப்ராகிம் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டச் சீரமைப்பு(திருமண, மணவிலக்கு)த் திருத்தத்துக்கு(எல்ஆர்கே) ஆதரவளித்து எல்லாக் குடிமக்களுக்கும் நியாயம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“மற்றவர்களிடம் நியாயமாக நடந்துகொள்வது என்பது நீங்கள் அவர்களிடம் எதை எதிர்பார்ப்பீர்களோ அதை அவர்களுக்குச் செய்து விடுவதுதான்.
“மற்றவர்கள் உங்களிடம் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்றால் நீங்களும் மற்றவர்களிடம் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்”, என்றவர் அவரது வலைப்பதிவில் பதிவிட்டிருந்தார்.
எல்ஆர்கே சட்டவரைவு தன்மூப்பாக குழந்தைகள் மதம் மாற்றப்படுவதைத் தடுக்கிறது. அது அடுத்த மார்ச் மாத நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
ஐயா சைட் இப்ராஹிம் ஆகிவர்களே– அம்னோ -பாஸ் நாதாரிகளுக்கு நீதி நியாயம் தெறியும் ஆனால் தெரியாது. நான் சொல்லியா தெரிய வேண்டும்– எல்லாமே தெரிந்ததுதானே.
சமய பற்றோறோடு, மற்றவர்களின் உரிமையை மதிக்கின்ற மனிதர்களால் மட்டுமே இப்படியெல்லாம் சிந்திக்கமுடியும்.