சரவாக் பாவ் நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கம்போங் திரிங்கூசில் உள்ள பிரிக் மலையேறச் சென்ற 33 பேரடங்கிய மலையேறிகளைச் சனிக்கிழமையிலிருந்து காணவில்லை.
நேற்றே அக்குழுவினர் மலையேற்றத்தை முடித்துக்கொண்டு திரும்பியிருக்க வேண்டும். அவர்கள் திரும்பாததைக் கண்ட ரோய்லிங் கென் என்பார் இன்று காலை பாவ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்தார்.
அவர்களைத் தேடி தீயணைப்பு, மீட்புத் துறை குழுவொன்று புறப்பட்டுச் சென்றுள்ளது.