ஒரே ஒரு கப்பல்தான் இப்போது காணாமல்போன எம்எச்370 விமானத்தைத் தேடுகிறது

mh370காணாமல்போன   எம்எச்  370   விமானத்தைத்   தேடும்   பணியைத்    தொடர்வதற்கு    MV Fugro Equator  கப்பல்    இன்று    மேற்கு   ஆஸ்திரேலியாவின்       ப்ரிமேண்டல்    துறைமுகத்திலிருந்து   புறப்பட்டது.

2014   மார்ச்   8-இல்   239  பேருடன்   காணாமல்போன   எம்எச்  370  விமானம்   ஆழ்க்கடலின்   பள்ளமான  பகுதிகளில்     கிடக்கிறதா     என்று   அது   தேடிப்  பார்க்கும்.

ஆழ்க்கடல்   பள்ளங்களுக்குச்   சென்று    தேடிப்   பார்க்கும்    சாதனம்   ஒன்று   அக்கப்பலில்  உள்ளது.  கடலில்   ஆறு  கிலோமீட்டர்  ஆழம்வரை    அதனால்    செல்ல   முடியும்.

இதுவரை,   விமானத்தைத்   தேடும்   பணியில்    சேர்ந்து   ஈடுபட்டிருந்த    சீனக்   கப்பலான   டொங்  ஹை  ஜியு  101  அண்மையில்   நாடு    திரும்பியதை     அடுத்து   இப்போது   எம்வி  புக்ரோ   ஈக்குவேடர்    மட்டுமே    தேடல்    பணியில்   ஈடுபட்டுள்ளது.