ஹரப்பான், பெர்சத்து தேர்தல் உடன்படிக்கை

 

Electoralpactஹரப்பான் கூட்டணியின் மூன்று பங்காளிக்கட்சிகள் மற்றும் பார்ட்டி பிரிபூமி பெர்சத்து ஆகியவற்றுக்கிடையில் எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு எதிராக நேரடிப் போட்டியை உறுதிசெய்வதற்கான ஓர் ஒப்பந்தம் இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஹரப்பான் உறுப்புக் கட்சிகளான பிகேஆர், டிஎபி மற்றும் அமனா ஆகிய மூன்றும் அடுத்தப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பெர்சத்துவுடன் இணைந்து எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஒன்றை அமைக்கவும் ஒப்புக்கொண்டன.

பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில், அமனா தலைவர் முகம்மட் சாபு, டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் மற்றும் பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

அடுத்த 14 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் புதிய அரசாங்கம் அமைப்பதற்கு ஏதுவாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைத்தல், போட்டியிடும் இருக்கைகள் ஒதுக்குதல் மற்றும் பொதுவான தேர்தல் கொள்கை பிரகடனம் ஆகியவற்றை கையாள்வதற்கு ஒரு நிபுணத்துவக் குழுவை அமைக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.