அன்வாரின் விடுதலை முயற்சி பலனின்றிப் போனது

anwarகுதப்புணர்ச்சி II குற்றச்சாட்டையும்  தண்டனையையும்      நீதிமுறை   மேலாய்வு    செய்யக்கோரி  பிகேஆர்    நடப்பில்    தலைவர்  அன்வார்  இப்ராகிம்    செய்திருந்த  விண்ணப்பத்தைக்     கூட்டரசு    நீதிமன்றம்   நிராகரித்து  விட்டது.

அது   நிராகரிக்கப்பட்டதால்     எதிரணித்    தலைவருக்கு    இனி   2018    நடுப்பகுதிவரை    சிறைதான்.

அவருக்குக்     கொடுக்கப்பட்ட   தண்டனை    நியாயமானதுதான்    என்றும்   அவருக்கு     எதிராக     பாகுபாடு   எதுவும்   காட்டப்படவில்லை      என்றும் வழக்கை     விசாரித்த    மலாயா   தலைமை  நீதிபதி    சுல்கிப்ளி    அஹமட்  மகினுடின்   தலைமையிலான   ஐவரடங்கிய    நீதிபதிகள்  குழு    தீர்ப்பு    வழங்கியது.

அக்குழுவில்   இடம்பெற்றிருந்த    மற்ற   நீதிபதிகள்  வருமறு:  சாபா,  சரவாக்  தலைமை   நீதிபதி    ரிச்சர்ட்  மலாஞ்சும்,   நீதிபதி     ஹசன்  லா,   நீதிபதி    அபு   சாமா  நோர்டின்,  நீதிபதி    ஸஹாரா  இப்ராகிம்.

ஆனால்,  நீதிபதி   மலாஞ்சும்     உறவினர்   ஒருவரின்   சவ    அடக்கச்   சடங்கில்    கலந்துகொள்ள   வேண்டியிருந்ததால்    இன்று     நீதிமன்றம்   வரவில்லை.