தாம் செய்திருந்த முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தாலும் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை பெறும் தம்முடைய முயற்சி நிற்காது, தொடரும் என்கிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்.
“எல்லாம் முடிந்து விடவில்லை. சட்டப்படி அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து என் வழக்குரைஞர்களுடன் விவாதிப்பேன்”, என அன்வார் கூறினார்.
தம் உதவியாளர் முகம்மட் சைபுல் புஹாரி அஸ்லானைக் குதப்புணர்ச்சிக்கு உள்ளாக்கியதாகக் குற்றஞ்சாட்டி அதற்காகக் கொடுக்கப்பட்டிருந்த ஐந்தாண்டுச் சிறைத் தண்டனையை மறுஆய்வு செய்யக் கோரி செய்திருந்த மனுவை ஐந்து நீதிபதிகளைக் கொண்ட நீதிபதிகள் குழு நிராகரித்ததை அடுத்து அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார்.
தீர்ப்பு என்னவாக இருந்தாலும் தாம் நிரபராதிதான் என்றவர் சொன்னார்.
தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று குறிப்பிட்ட அன்வார், கூட்டரசு நீதிமன்றம் தம் வழக்குரைஞர் குழு முன்வைத்த எல்லா விவாதங்களையும் கவனத்தில் கொள்ளவில்லை என்றார்.
ஐயா அன்வர் அவர்களே என்ன முயற்சி எடுத்தாலும் ஒன்றும் நடக்காது–ஆனாலும் முயற்சியை விடக்கூடாது. இல்லாவிட்டால் நம்பிக்கை நாயகனுக்கு இன்னும் துளிர் விட்டுடும்–