2016 ஜனவரி- செப்டம்பரில் ரிம150.8 பில்லியன் முதலீடு

musமலேசியாவில்   2016   ஜனவரிக்கும்   செப்டம்பருக்குமிடையில்    தயாரிப்பு,  சேவை,  மூலப்   பொருள்   துறைகளில்    மொத்தம்   ரிம150  பில்லியன்   முதலீடு   செய்யப்பட்டுள்ளது.

கடந்த   ஆண்டு    இதே  காலக்  கட்டத்தில்    செய்யப்பட்ட   ரிம156.6  பில்லியன்   முதலீட்டுடன்   ஒப்பிட்டால்    இது   3.7 விழுக்காடு  குறைவுதான்    என்றாலும்   இது    117,550   வேலைவாய்ப்புகளை   உருவாக்கும்    என     வர்த்தக,  தொழில்துறை   அமைச்சர்   முஸ்தபா   முகம்மட்    கூறினார்.

இதில்  உள்நாட்டு   முதலீடுகள்    74.8  விழுக்காடு   என்றும்   எஞ்சியவை   வெளிநாட்டு  முதலீடுகள்   என்றும்   முஸ்தபா   கூறினார்.