ஆய்வாளர்கள்: ஹராபான் -பெர்சத்து உடன்பாடு வெற்றிபெற பாஸின் உதவியும் தேவை

analyseபக்கத்தான்   ஹராபானும்    பார்டி  பிரிபூமி    பெர்சத்து(பெர்சத்து)வும்   அடுத்த   பொதுத்   தேர்தலில்  பிஎன்னைத்   தோற்கடிக்க   விரும்பினால்     அவை    பாஸ்  கட்சியையும்     தங்களுடன்  சேர்த்துக்கொள்வதே     உசிதமாகும்   என்பது    அரசியல்    ஆய்வாளர்களின்   கணிப்பு.

“பாஸின்றி    அவற்றுக்கு(பிஎன்னை   எதிர்ப்பது)  கடினமாக   இருக்கும்”,  என   யுனிவர்சிடி     மலேசியா   சரவாக்    விரிவுரையாளர்   ஜெனிரி   அமிர்   கூறினார்.

பாஸைச்  சேர்த்துக்கொள்ள  முடிந்தால்      எதிரணி   வெற்றி  பெறுவதற்கான   வாய்ப்பு  பிரகாசமாக    இருக்கும்     என  ஐடியஸ்    தலைவர்    வான்   சைபுல்    வான்   ஜான்   கூறினார்.

ஜெனிரியும்   சைபுலும்    நேற்று    ஹராபானும்   பெர்சத்துவும்    செய்து  கொண்ட   ஒத்துழைப்பு  உடன்பாடு   குறித்துக்   கருத்துரைத்தபோது      அவ்வாறு    கூறினர்.