இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு நிறுவனம் (ஓஐசி) மியான்மாரில் ரொஹின்யா விவகாரம் குறித்து அவசரக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
ஓஐசி தலைமைச் செயலாளர் யூசுப் அல்- ஒதைமின், “ரொஹின்யா சமூகத்தின் மனித உரிமைகள் ஒடுக்குப்படுவதையும் மீறப்படுவதையும்” கண்டித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
“அனைத்துலகச் சமூகத்தில் உறுப்பு வகிப்பது வாய்ப்புகளைக் கொண்டு வருவதுடன் பொறுப்புக்களையும் கொண்டிருக்கிறது என்பதை மியான்மார் அரசாங்கம் உணர வேண்டும்”, என ஓஐசி வலியுறுத்தியது.
இராணுவம் பொதுமக்களைப் படுகொலை செய்வதாகவும் பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதாகவும் வரும் செய்திகளை அனைத்துலக நாடுகள் விசாரிக்க வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.
மியான்மார் அரசாங்கம் அதன் இராணுவம் வன்முறையில் ஈடுபடுவதாகக் கூறப்படுவதை மறுத்தது. ஆங்காங்கே உள்ள தீவிரவாதிகள் அப்படி நடந்து கொண்டிருக்கலாம் என்று அது கூறிற்று.
அட OIC வெங்காயங்களா ! ரொஹின்யா மக்களை முஸ்லீம் நாடான பங்களாதேஷ் அரசாங்கமே ஏற்க முன்வராதபோது முஸ்லீம் அல்லாத நாடான மியன்மாரை ஏற்க சொல்வது என்னடா நியாயம் ?