ஹராபான் -பெர்சத்து உடன்பாட்டுக்கு அன்வார் வரவேற்பு

harapanபார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியா (பெர்சத்து)    பக்கத்தான்   ஹராபானுடன்   ஒத்துழைக்க   உடன்பாடு   கண்டிருப்பதை     பிகேஆர்   நடப்பில்     தலைவர்    அன்வார்  இப்ராகிம்    வரவேற்றார்.

இனி,   அதில்   சம்பந்தப்பட்ட    எல்லாத்    தரப்பினரும்   கடுமையாக   உழைக்க   வேண்டும்  என்றவர்    கேட்டுக்கொண்டார்.

நேற்று  பெர்சத்து  பக்கத்தான்  ஹராபானில்   இடம்பெற்றுள்ள   மூன்று    கட்சிகளுடனும்    தேர்தல்   கூட்டணி   அமைக்க    ஒப்புக்கொண்டு  ஏழு   உடன்பாடுக்ளைச்    செய்து  கொண்டது.

நேற்றைய    கூட்டத்தில்    ஏழு  துறைகளில்  ஒத்துழைக்க      ஒப்புக்கொண்டு   அக்கட்சிகளின்   தலைவர்கள்     உடன்பாடுகளில்  கையெழுத்திட்டனர்.  மற்றவற்றோடு  தேர்தல்   தொகுதி   ஒதுக்கீடு,  பொதுவான    தேர்தல்   கொள்கை    அறிக்கை,  பொதுவான   அடையாளச்   சின்னம்   ஆகியவை  குறித்து    விவாதிக்க    ஒரு   நிபுணத்துவக்  குழுவையும்       அமைக்க      அவை   ஒப்புக்கொண்டன.

என்னதான்     ஹராபானும்    பெர்சத்துவும்     உடன்பாடு   கண்டிருந்தாலும்   பாஸ்  கட்சியும்    அவற்றை  விட்டு  விலகி  இருப்பதே    ஒரு  குறைதான்    என்று   அரசியல்   ஆய்வாளர்கள்    நினைக்கிறார்கள்.