ரோஹின்யா பேரணியில் கொதித்தெழுந்த பாஸ் இப்போது வாயை மூடிக் கொண்டிருப்பது ஏன்?

amanahபாஸ்   இளைஞர்   பகுதித்   தலைவர்    நிக்   அப்டு   நிக்   மாட்   எங்கு   போனார்   என்று  வினவுகிறார்    அமனா   இளைஞர்    துணைத்  தலைவர்   பயிஸ்   பாட்சில்.

பிரதமர்     நஜிப்    அப்துல்     ரசாக்,    பாஸ்     தலைவர்    அப்துல்    ஹாடி    ஆவாங்    போன்ற    தலைவர்கள்    கலந்துகொண்ட     ரோஹின்யா  ஒற்றுமைப்   பேரணி  முடிந்து   ஒரு    வாரமாயிற்று.

அவ்விவகாரம்   தொடர்பில்    புத்ரா   ஜெயா   மேல்நடவடிக்கை     எதுவும்   எடுப்பதுபோல்    தெரியவில்லை      என்று   கூறிய   பயிஸ்,  அப்பேரணி   “வெறும்  பேச்சாகவும்  அரசியல்   உணர்வுகளை”   வெளிப்படுத்தும்  நிகழ்வாகவும்    அமைந்ததுதான்   மிச்சம்    என்றார்.

“இதில்   அவப்பேறான   விசயம்   என்னவென்றால்,   பேரணியில்   கலந்துகொண்டு   உரையும்   ஆற்றிய   நிக்   அப்டுவும்   வாயைப்  பொத்திக்  கொண்டிருப்பதுதான்”.

“ஒரு‘ஆலோசகர்’   என்ற  முறையில்   அந்த   மனித  உரிமை   நெருக்கடி    தொடர்பில்    அடுத்து    எடுக்கப்பட   வேண்டிய    நடவடிக்கை    என்ன?”,  என்று  பயிஸ்   இன்று   வெளியிட்ட   அறிக்கை   ஒன்றில்    வினவினார்.