பிகேஆரையும் அமனாவையும் சேர்ந்த உயர்த் தலைவர்கள் இரு கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பரிந்துரையைப் புறந் தள்ளினர்.
பிகேஆர் இளைஞர் துணைத் தலைவர் டாக்டர் அபிப் பஹார்டின் முன்வைத்த அப்பரிந்துரை குறித்துக் கருத்துரைத்த கட்சித் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், இணைப்புக்கு “இன்னும் காலம் கனியவில்லை” என்றார்.
“அபிப்புக்குப் பரிந்துரைக்க உரிமை உண்டு. ஆனால், அதற்கு இன்னும் காலம் கனியவில்லை என்பதுதான் என் கருத்து. அமனா சிறகு விரித்துப் பறக்க வாய்ப்பளிக்க வேண்டும்”, என சைபுடின் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அமனா துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப், அது குறித்து கட்சி எண்ணியதே இல்லை என்றார்.
“அமனாவை அமைக்குமுன்னர் (பிகேஆரில் சேர) நினைத்ததுண்டு. ஆனால், இப்போது ஒரு கட்சியை அமைத்து விட்டோம், அதனால் அப்படி ஒரு எண்ணமே இல்லை”, என்று கூறினார்.
முன்னதாக அபிப், பாஸிலிருந்து பிரிந்து வந்த அமனாவுடன் இணைவது குறித்து பிகேஆர் கட்சிக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது உண்டு என்றும் அக்கட்சிகளின் இணைப்பு எதிரணிக்கு மேலும் வலுச் சேர்க்கும் என்றும் கூறியிருந்தார்.
எந்த புத்துல என்னென்ன பாம்புகள் இருக்கு என இனிமேல்தான் பக்காத்தான் ஹரப்பானுக்கு தெரியப்போகிறது.