கிள்ளான் பள்ளத்தாக்கில் டிசம். 19-இலிருந்து 24 வரை நீர் விநியோகத் தடை

air டிசம்பர்   19-இலிருந்து 24  வரை,  கிள்ளான்  பள்ளத்தாக்கில்     நீர்  விநியோகம்   தடைப்படும்   பகுதிகளுக்கு    தண்ணீர்  கிடைப்பது    உறுதிப்படுத்தப்படும்    என   ஷியாரிகாட்   பெக்காலான்   ஆயர்  சிலாங்கூர்   அறிவித்துள்ளது.

ஹுலு  சிலாங்கூரில்   மின்விநியோகத்   துணை  நிலையமொன்றில்     தெனாகா   நேசனல்   பராமரிப்பு   வேலைகள்  செய்வதால்   பெட்டாலிங்   கிள்ளான்/ஷா  ஆலம்,  கோம்பாக்,   கோலா  லங்காட்,  ஹுலு   சிலாங்கூர்,  கோலா  சிலாங்கூர்,  கோலாலும்பூர்   ஆகியவற்றுக்கு   நீர்  விநியோகம்   தடைப்படும்.

திங்கள்கிழமை   தொடங்கும்   மின்விநியோகத்   துணை  நிலையப்   பராமரிப்பு   வேலைகளால்   கிள்ளான்   பள்ளத்தாக்கில்   மொத்தம்  814  பகுதிகளும்  3.89  மில்லியன்   பயனீட்டாளர்களும்   பாதிக்கப்படுவார்கள்    எனத்   தெரிகிறது.

போதுமான  நீரைச்  சேமித்து  வைத்துக்கொள்ளுமாறு   பயனீட்டாளர்களுக்கு     அறிவுறுத்தப்படுகிறது.

மேல்விவரம்   வேண்டுவோர்   www.syabas.com.my  வலைத்தளம்   செல்லலாம்.