பக்கத்தான் ஹரப்பான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் பிகேஆர் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயில் இடைக்காலத்திற்கு பிரதமராக பதவி வகிக்கலாம் என்ற முன்மொழிதலை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் மாட்ஸிர் காலிட் ஓர் “அரசியல் நகைச்சுவை” என்று வர்ணித்தார்.
லிம் கிட் சியாங் இந்த ஆலேசனையை வழங்கினார். அரச மன்னிப்பைத் தொடர்ந்து அன்வார் இப்ராகிம் சிறையிலிருந்து வெளியாகும் வரையில் வான் அஸிசா வான் இஸ்மாயில் இடைப்பட்ட காலத்திற்கு பிரதமராக இருக்கலாம் என்றாரவர்.
பெர்னாமா செய்திப்படி, இது முற்றிலும் நடமுறைக்கு ஒவ்வாதது, ஏனென்றால் அகோங் அன்வாருக்கு மன்னிப்பு வழங்கியதும் அவரை உடனடியாக பிரதமராக நியமிக்க வேண்டும் என்று மாட்ஸிர் கூறினார்.
இவற்றை எல்லாம் குறுகிய நேரத்தில் செய்ய முடியாது என்று மாட்ஸிர் இன்று அலோர் செதாரில் கூறினார்.
சிரிப்பாய் சிரிக்கிறது உங்கள் செயல்பாடு , மற்றவரிடம் ஏளனச்சிரிப்பு எதற்கு ? நாட்டை வளப்படுத்திய முன்னாள் பிரதமருக்கே ,உங்களின் செயல் எரிச்சல் ஏற்படுத்தியுள்ளது . எதிரணியுடன் சேரும் நிலையில் அவரும் , அம்னோ உறுப்பினர்களும் உள்ளனர் . இன்னுமா ? உங்கள் ஆணவம் இன்னும் தேவையா? உலகமே சிரிக்கும் அளவுக்கு பொய் விடாதீர்கள் .