போலீசார் மேற்கொண்ட அதிரடி பறிமுதல் நடவடிக்கைகளால் அரசியல் சித்திரக் கலைஞர் ஸூனார் ரிம51,000 மதிப்புள்ள அவரது சித்திரங்களை இழந்துள்ளார்.
மூன்று வாரங்களுக்கு முன்பு, பினாங்கில் அவர் நடத்திய கண்காட்சியில் ரிம21,000 மதிப்புள்ள கலைப் பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு நிதி திரட்டல் நிகழ்ச்சியில் சுமார் ரிம30,000 என்று மதிப்பிடப்பட்டுள்ள அவரது நகைச்சுவை புத்தகங்கள் கிட்டத்தட்ட 1,000 பிரதிகளை போலீசார் எடுத்துச் சென்றனர் என்று ஸூனார் தெரிவித்தார்.
இந்தச் சூழலில், தமது வேலையைத் தொடர்வதற்கு ஸூனார் நிதி உதவி கோருகிறார்.
“மக்களுக்காக கேலிச்சித்திரங்களைத் தொடர்ந்து வரைவதற்கு எனக்கு உங்களுடைய ஆதரவு தேவைப்படுகிறது” என்று ஸூனார் கேட்டுக்கொண்டார். நன்கொடைகள் பற்றிய விபரங்கள் அவரது வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
நேற்று நடைபெற்ற நிதி திரட்டல் நிகழ்ச்சியின் போது போலீசார் ஸூனார் மற்றும் நால்வரை கைது செய்தனர். பின்னர், நேற்றிரவு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஸுனாருக்கு நன்கொடை அளிப்பதில் தவறு ஏதும் இல்லை. இந்த காவல் குண்டர்களுக்கு நல்லவர்களை என்றுமே பிடிக்காது.