ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் பரிபாலனம்) சட்டம் (சட்டம் 355) திருத்தங்கள் மசோதாவை பெடரல் அரசாங்கம் எடுத்துக் கொண்ட பின்னர் பாரிசான் நேசனல் பங்காளிக்கட்சிகள் அத்திருத்தங்களுக்கு எதிராக ஆட்சேபம் தெரிவிக்க முடியாது.
ஆளும் கூட்டணியின் பங்காளிகள் என்ற முறையில் பாரிசான் நேசனல் பங்காளிக்கட்சிகள் அந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் கட்டாயத்துக்கு உட்பட்டுள்ளன என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அஹமட் மாஸ்லான் கூறினார்.
இதற்கு முன்னர் சட்டம் 355 க்கான திட்டமிடப்பட்ட திருத்தங்களை மசீச விரும்பவில்லை என்று நாம் கேட்டிருக்கிறோம்; மஇகா ஆட்சேபித்தது; கெராக்கான் கூட ஆட்சேபித்தது.
ஏன் ஆட்சேபிக்கிறீகள் என்ற கேட்டபோது, இந்த மசோதாவை பாஸ் கட்சியின் அப்துல் ஹாடி அவாங் கொண்டு வந்தார் என்று அவர்கள் அம்னோவிடம் தெரிவித்தனர் என்று பிடபுள்யுடிசியில் இன்று நடைபெற்ற ஓவர்சீஸ் கிளப் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் மஸ்லான் கூறினார்.
சட்டம் 355 க்கான திருத்தங்களை ஹாடி அவாங் நாடாளுமன்றத்தின் கடந்த அமர்வில் தாக்கல் செய்தார்.
இனி அந்த மசோதா அடுத்த இரண்டாவது கட்ட வாசிப்புக்கு நாடாளுமன்றத்திற்கு வரும் போது அதை இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் ஜமில் கிர் பாரும் கையாளுவார்.
இதற்கு முன்னதாக, மசீச தலைவர் லியோ தியோங் லாய், ஹாடியின் மசோதா நிறைவேற்றப்பட்டால் அவர் அமைச்சரவையிலிருந்து விலகிவிடப் போவதாக சூளுரைத்துள்ளார்.
ஆனால், இப்போது புத்ராஜெயா அந்த மசோதாவை அதனுடைய மசோதாவாக ஏற்றுக்கொண்ட நிலையில், பிஎன் பங்காளிக்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதை உறுதியாகக் கூறுவதற்கில்லை.
பங்காளி துவ காட்சிகள் என்றுதான் வாயை திறந்தன ? மா இ கா வும் மா சி சா வும் மானம் இழந்து பல வருடம் ஆகிறது ….. இதில் இப்படி கூறுவது அவர்களின் தன்மானத்தை எட்டி உதைப்பதாகும் … இருப்பினும் பங்காளி துவ காட்சிகள் வாயை திறக்கமாடார்கள் …
எஸ் சார் போட ம இ கா இப்போதே இரண்டு கைகளையும் உயர்த்த தயார் . எங்களுக்கு வேண்டியது பட்டம் பதவிதான் .
இதையெல்லாம் நாங்க ஆட்சேபித்து விடுவோமா என்ன? அந்த அளவுக்கா எங்களுக்கு தில்/திராணி இருக்கு? எங்க மதமே உங்க மதத்திலிருந்து வந்ததுதான் என்று சொல்வதையும் நாங்க கேணப் பயக மாதிரி கேட்டுக்கிட்டுதானே இருக்கோம்? எவனும் வாயத் திறக்கலியே அப்புறம் இதை மட்டும் எப்படி ஆட்சேபிபோம்? முறுக்கு, அதிரச்ம உங்க பலகாரம்…செல்லை வேட்டி உங்க பாரம்பரிய உடை…தோசை உங்க உணவு..சரிதானே? எந்த அரசியல்வாதியாவது ஓட்டு கேட்டு வீட்டு வாசப்படிய மிதிக்கட்டும் அப்புறம் இருக்கு கச்சேரி…இத நான் சொல்லலே எதிர் வீட்டு முனியம்மா கெழவி குளிர் ஜொரத்திலே முணு முணுக்குதுங்க…
அப்படினா சட்டம் 355 – யை திருத்தாதீங்க! எதற்கு பங்காளிப் பகை?
கூறு கெட்ட கம்மனாட்டிகளை தலைகளாக ஏற்றுக்கொண்டால் இதுவும் சொல்லுவாங்கள் இன்னமும் சொல்லுவாங்கள்- துரோகிகளை என்ன செய்வது? ஒன்று மட்டும் நிச்சயம் -இந்த நாட்டில் என்றுமே நீதி நியாயம் என்பதற்கு இடம் இருக்காது– நம்பிக்கை நாயகன் தன்னுடைய அரசியல் வாழ்க்கை நீடிக்க எது வேண்டுமானாலும் சொல்லுவான் செய்வான்– இப்போது PAS சை நக்கிக்கொண்டிருப்பது வேறு எதற்க்காக-இதற்காகத்தான்.
ஷரியா நீதிமன்றங்கள் சட்டம் 355 திருத்தங்களுக்கு பின், “நன்கொடை” பெறுபவரின் கையை வெட்டுவீர்களா ? அல்லது கையை பிடித்து முத்தம் கொடுப்பீர்களா ? என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். சட்டென ஒரு முடிவுக்கு வாருங்கள்.
சட்டம் 355 திருத்தங்களுக்கு பின் பங்களிக்கட்சிகள் ஆட்சேபிக்க முடியாது ஆனால் உங்க கூட்டணியிலிருந்து வெளியேறலாம் அல்லவா?
மாஇகா-வை மறந்து நிம்மதியாக இருக்கும் இந்தியர்களுக்கு மீண்டும் மீண்டும் மாஇகா-வை நினைவு படுத்தி இந்தியர்களின் நிம்மதிக்கு உலை வைப்பதில்தான் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் என்ன சொன்னாலும் கேட்கவா போகிறீர்கள்.
இதுதான் கூட வச்சிக்கிட்டே குழி பறிப்பது- தப்பு என்று தெரிந்தும் அதனை ஆதரிப்பது மண்டைக்கனம் – உருவாக்குவது இவர்களே – செய்வது அரசாங்கமாம் – என் முட்டிக்கு கீழே நீங்கள் என்று பறைசாற்றுகிறான் –
அம்னோ காரன்களுக்கு அழிவுக்காலம் நெறிங்கி வருவது தெளிவாக தெரிகிற்து. நீங்க போடுங்கடா ஆட்டம் என்னா செய்யுனுமோ செய்யுங்கடா…
Anonymous V நீங்கள் கூறுவதும் ஒரு வகையில் உண்மைதான். ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் மஇகா பெயரை செய்தியை பிரசுரிக்காமல் இருந்தாலே போதும் இந்தியர்களின் மனதிலிருந்து மஇகா தானாகவே மறைந்துவிடும்.
1. இங்கே வாசகர்கள் மஇக வைப் பற்றிக் குறிப்பிட்ட அனைத்து மனக் குமுறல்களும் தனிப் பட்டயொருவரை மட்டும் சம்பத்தப் படுத்த வில்லை; ஒவ்வொன்றும் இந்திய சமுகத்தின் உணர்ச்சிகரகமான வெளிப் பாடுகள். அரசு மூலம் மஇக வினால் இந்திய சமுகத்திற்கு இதுநாள் வரை கிடைத்தது என்னவென்று பட்டியல் போட முடியவில்லை; சமுகம் இழந்ததற்கான பட்டியல் நீண்டுக் கொண்டே போகும். இருந்தும் மஇக விலும் சுயமரியாதையுள்ள நல்லவர்களுமுண்டு. 2. கடந்தக் காலங்களை பற்றி பேசுவதால் இனிமேல் எந்தப் பயன்களும் நமக்கு கிடைக்கப் போவதில்லை; நடக்கப் போவதைப் பற்றி இனிப் பேசுவோம்; செய்வோம். எதைச் செய்தால் நாம் இனிப் பயன்களை அடைவோமே, அதையேதான் செய்ய வேண்டும். 3. பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நல்ல ஆட்சி அமைவதற்க்கான வாய்ப்பை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். தேசிய அளவில் நாம் வலிமையான வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்; வாக்களிக்கும் தகுதிகளிருந்தும் நம்மில் பலர் இன்னும் பதிவு செய்துக் கொள்வதில் அக்கறைக் காட்டுவதில்லை. இப்படிப்பட்டவர்கள் மஇக வை குறைச் சொல்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இதனால் நமக்கு என்னப் பயன்கள் கிடைத்து விடப் போகின்றது! 4. தேசிய அளவில் வாக்கு வங்கியென்றால் ஒட்டுமொத்த வாக்காளர்களின் அளவில் நம் வாக்கு வங்கியின் அளவும் உயர வேண்டும்; உயர்ந்திருக்கவும் வேண்டும். மொத்தத்தில் வாக்காளர்ப் பட்டியலில் நாம் ஒரு தேசிய சக்தியாக வளரவேண்டும். நாமனைவரும் பதிவுச் செய்யும் அவசியத்தை உணரவேண்டும்; . அப்படியிருந்தால்தான் மற்றவர்களின் மரியாதையும் மதிப்பையும் பெறலாம்; நம்மை இப்படி யாரும் அலட்சியமாகவும் ஏளனமாகவும் பேச மாட்டார்கள். 5. இந்த வாக்கு வங்கி எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள கடந்தக் காலங்களில் நாம் கடுமையான முயற்சிகள் எடுக்கவுமில்லை; மஇக வினரும் இதில் அக்கறைக் காட்ட வில்லை. அவர்களுக்கு இந்தியச் சமுகத்தின் மேல் அவ்வளவு அக்கறை; அவ்வளவு மரியாதை!