பக்கத்தான் ஹராபான் பிரதமர் பதவிக்குப் பொருத்தமான வேட்பாளர் குறித்து முடிவெடுப்பது முக்கியம் என்கிறார் பார்டி அமனா நெகரா (அமனா) தொடர்பு இயக்குனர் காலிட் சமட். அது தேர்தலுக்குப்பின் பதவிப் போராட்டம் தலைதூக்குவதைத் தவிர்க்க உதவும்.
மேலும், அது பொதுமக்கள் அக்கறை காட்டும் ஒரு விவகாரமுமாகும் என அந்த ஷா ஆலம் எம்பி கூறினார்.
“தேர்தலுப்பின்னும் கூட்டணி நிலைத்திருப்பதை உறுதி செய்ய அது அவசியம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஹராபான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் குறித்து விவாதிப்பதை விடுத்து அன்றாட பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கூறியிருப்பது குறித்துக் கருத்துரைத்தபோது காலிட் அவ்வாறு குறிப்பிட்டார்.