பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் (எஃப்ஜிவி) நிறுவனத்தின்மீது அதன் பங்குதாரர்களின் நம்பிக்கை குறைந்து வருவதால் அதன் தலைவர் முகம்மட் இசா அப்துல் சமட்டைப் பணிநிக்கம் செய்ய வேண்டும் என பெர்க்காசா முன்மொழிந்துள்ளது.
“எஃப்ஜிவி நிறுவனத்தின் இழப்புகளுக்கு அவர்கள்தான் காரணம் எனத் தெரிந்தால் அதன் தலைவரைப் பணிநீக்கம் செய்வது உள்பட, அந்நிறுவனத்தின் உயர் நிர்வாகிகளின் நியமனங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அரசாங்கத்தை பெர்க்காசா கேட்டுக்கொள்கிறது”, என பெர்க்காசா பொருளாதாரப் பிரிவுத் தலைவர் ருஹானி அஹ்மட் ஓர் அறிக்கையில் கூறினார்.
“மலேசிய ஊழல்தடுப்பு ஆணையமும் (எம்ஏசிசி) அந்நிறுவன நடவடிக்கைகளைப் புலனாய்வு செய்ய வேண்டும்”, என்றாரவர்.
எஃப்ஜிவி ஆயிரக்கணக்கான பங்குதாரர்களைக் கொண்ட நிறுவனம், 1எம்டிபி-இல் ஏற்பட்டது போல் தெரியும் தவறுகள் அங்கு நிகழ்வதைக் காண பெர்க்காசா விரும்பவில்லை என்றாரவர்.