கைருடின்: முகைதின் கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டிலிருந்து முதலில் விடுபட வேண்டும்

khairபார்டி   பிரிபூமி   பெர்சத்து  மலேசியா (பெர்சத்து)  தலைவர்    முகைதின்  யாசின்,    அவர்   மணமான  ஒரு  பெண்ணுடன்   கள்ளத்தொடர்பு   வைத்திருந்தார்   என்ற  குற்றச்சாட்டிலிருந்து   தம்மை   விடுவித்துக்  கொள்வது   முக்கியம்   என்று  வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாலியல்   விவகாரம்  காரணமாக   கட்சி    நிறுவுனர்களில்     ஒருவரான  அனினா   சாடுடின்   ஸ்ரீகண்டி   தொகுதித்   தலைவர்   பதவியிலிருந்து   அகற்றப்பட்டிருப்பதாகக்   கூறப்படுகின்ற    வேளையில்   முன்னாள்  பெர்சத்து  உறுப்பினர்    கைருடின்   அபு   ஹசான்   இவ்வாறு   கூறினார்.

“பெர்சத்து   தூய்மையான,  நேர்மையான    கட்சியாகக்   காட்சியளிக்க  வேண்டும்……..கட்சியின்   நன்மைக்காக    தலைவர்   அவர்  பெயருக்கு  ஏற்பட்டுள்ள  களங்கத்தை  நீக்க  வேண்டும் ”,  என  கைருடின்  இன்று  ஓர்    அறிக்கையில்   கூறினார்.

முன்னாள்    அரசுதரப்பு   வழக்குரைஞர்   ஒருவர்    மணவிலக்கு    வழக்கு   ஒன்றில்  தம்   மனைவி    முகைதினுடன்   கள்ளத்  தொடர்பு   வைத்திருந்தார்   என்று  குற்றஞ்சாட்டியிருப்பதைத்தான்   கைருடின்   குறிப்பிடுகிறார்.

ஆனால்,  முன்னாள்     துணைப்   பிரதமர்    அதை   மறுத்துள்ளார்.     அது   தம்மை    அவமதிப்பதற்காகவே    வேண்டுமென்று  கூறப்பட்ட    குற்றச்சாட்டு     என்றாரவர்.

ஆனாலும்   அடிநிலை   உறுப்பினர்களிடையே    அது  குறித்து    இன்னும்  பரபரப்பாக  பேசப்பட்டு   வருவதால்    அதற்கு  முதலில்   தீர்வு  காண்பது   அவசியம்    என  கைருடின்   கூறினார்.