தாய்லாந்தில் 12ஆவது சுனாமி நினைவு நாள்

12தாய்லாந்தில்   இன்று,    2004  டிசம்பர்    26-இல்  14    நாடுகளைத்   தாக்கிப்  பேரழிவை   ஏற்படுத்திய   இந்தியப்  பெருங்கடல்    சுனாமியின்   12அம்  ஆண்டு   நினைவுநாள்   அனுசரிக்கப்பட்டது.

சுனாமியால்   பாதிக்கப்பட்ட   புக்கெட்,   க்ராபி,   பாங்-ங்கா,  ரனோங்,   சாதுன்,   ட்ராங்   ஆகிய   ஆறு   மாநிலங்களிலும்   வழிபாடுகள்   நடத்தப்பட்டு   புத்த  பிட்சுகளுக்குப்   பிச்சை   இடுதல்   முதலிய   நிகழ்வுகள்    நடத்தப்பட்டன.

இந்தோனேசியாவில்   ஏற்பட்ட   9.1  சக்தி  கொண்ட   நில  நடுக்கத்தால்    உண்டான   ஆழிப்பேரலையால்   பாதிக்கப்பட்ட    நாடுகளில்     தாய்லாந்தும்   ஒன்று.  அங்கு  சுமார்   5,400  பேர்   பலியானார்கள்.

14   நாடுகளைத்    தாக்கிய   சுனாமியில்    மொத்தம்   230,000  உயிர்கள்  பலியானதாக   மதிப்பிடப்படுகிறது.

அதில்  பெரும்   அழிவை   எதிர்நோக்கிய   நாடு   இந்தோனேசியாதான்.