ரஃபிஸி பெல்டா-ஈகல் கொள்முதல் ஒப்பந்தத்தை வைத்து பிஎன் அரசை வீழ்த்தப் போவதாக கூறுகிறார்

 

Raficitobringbndownஇந்தோனேசியாவிலுள்ள பிடி ஈகல் ஹை பிளன்டேசனில் 37 விழுக்காடு பங்கை வாங்குவதற்கு பெல்டா போட்டிருக்கும் திட்டத்தைப் பயன்படுத்தி பின் அரசாங்கத்தை வீழ்த்தும் திட்டம் ஒன்றை பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி வைத்திருக்கிறார்.

இந்தோனேசியா பிளன்டேசனில் அந்நிறுவனத்தை எவ்வகையிலும் கட்டுப்படுத்தும் உரிமையை அளிக்காத 37 விழுக்காடு பங்கை யுஸ்$505.4 மில்லியனுக்கு (ரிம2. 26 பில்லியன்) வாங்குவதற்கான திட்டம் ஆளுங்கூட்டணி செய்துள்ள மிகப் பெரியத் தவறாகும் என்று ரஃபிஸி கூறினார்.

ஈகல் ஹை பிளன்டேசனை வாங்குவது அம்னோ மற்றும் பிஎன் தலைமைத்துவம் செய்கின்ற மிகப் பெரிய தவறாகும் ஏனென்றால் அது நான் பெல்டா தோட்டங்களுக்குச் சென்று இந்தத் தோட்டத்தில் பங்கு வாங்குவதற்கான நஜிப்பின் பொறுப்பை முழுமையாக விளக்குவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது என்றாரவர்.