அனிஸ் ஷாபிக் உள்பட, யுனிவர்சிடி மலாயா(யுஎம்) மாணவர்கள் நால்வர் தங்களை அப்பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்தது அரசமமைப்புக்கு விரோதமான செயல் என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அனிஸ் ஷாபியும் லுக்மான் நுல் ஹகிம் சுல் ரசாலியும் இறுதி ஆண்டு மாணவர்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் “தங்காப் எம்ஓ1” பேரணியில் கலந்துகொண்டதற்காக பல்கலைக்கழகம் அவர்களைத் தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளது.
அவர்களுடன் சேர்த்து இடைநீக்கம் செய்யப்பட்ட மற்ற இருவர் முகம்மட் லுக்மான் ஹகிம் முகம்மட் பஸ்லியும் சுஹாய்ல் வான் அஸஹாரும் ஆவர்.