முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பந்துவான் ரக்யாட் 1மலேசியா( பிரிம் உதவித் தொகை) ஒருவகை ஊழல் என்று கூறியிருப்பதை எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மறுக்கிறார்.
“அரசாங்கம் மக்களுக்குக் கொடுக்கும் எதுவும் மக்களிடமே கொடுக்கப்பட வேண்டும், அது ஊழலாகாது. அதைப் பெற மக்களுக்கு உரிமை உண்டு”, என வான் அசிசா இன்று பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.
மகாதிர் பிரிம் உதவித் தொகை “ஊழலானது” என்றும் அது “சட்டவிரோதமானது” என்றும் கூறியிருந்தார்.
மகாதிரின் அவ்வாறு குறிப்பிட்டது ஹராபான், பார்டி பிரிபூமி பெசத்து மலேசியா(பெர்சத்து) கூட்டணியைப் பாதிக்குமா என்று வினவியதற்கு அது மகாதிரின் கருத்து அவ்வளவுதான் என்று வான் அசிசா கூறினார்.
அம்மையாரே….நீங்களே சொல்லுங்க…கிடு கிடு வென உயரும் உணவுப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தி மக்களின் வாழ்க்கை சுமையை குறைப்பதும் முக்கியமா அல்லது பந்துவான் ரக்யாட் 1மலேசியா( பிரிம் உதவித் தொகை) இந்தப் பக்கம் கொடுத்து அந்தப் பக்கம் விலையை உயர்த்துவது அவசியமா?
இதை நீங்க அறிவுபூர்வமா சிந்திச்சி பதில் சொல்லியே ஆகணும்…அப்போதான் அடுத்த பொதுத் தேர்தலில் யாருக்கு ஓட்டுப்போடௌவது என்று முடிவெடுக்க எங்களால் முடியும்…
brim – பெரிய தில்லு முள்ளு. ஆனாலும் கிடைப்பதை விடுவானேன்? கடந்த ஆண்டு எனக்கு கிடைக்கவில்லை-என் என்று புரிவில்லை– இதற்காக மல்லுக்கு நிற்பதற்கும் நேரம் இல்லை– இன்று இந்த ஆண்டுக்கான-2017 – விண்ணப்பம் போட்டிருக்கிறேன்.கிடைக்குமா என்பது சந்தேகமே- நான் ஒரு vetran -முன்னாள் விமானப்படை. இருந்தும் அதற்க்கு மதிப்பு ஒன்றும் கிடையாது– ஆனால் இதன் பேரில் எவ்வளவோ நடக்கிறது– யார் கேட்பது?
அரசாங்கத்தின் இலவசம் அல்லது நன்கொடை என்று எடுத்து கொள்ளலாமா