கட்டண உயர்வால் விபத்துகள் குறையாது: ஸ்பாட்டுக்குப் பயனீட்டாளர் சங்கம் அறிவுறுத்தல்

amarjitபேருந்து   கட்டணத்தை  உயர்த்துவது    பேருந்து   விபத்துகளைக்  குறைக்கும்   என  நிலப்  போக்குவரத்து     ஆணையம் (ஸ்பாட்)    கூறியிருப்பதற்கு   மலேசிய   பயனீட்டாளர்   சங்கம்  (மாகோனாஸ்)   எதிர்ப்புத்    தெரிவித்துள்ளது.

“அன்றாடத்    தேவைகளை    நிறைவேற்ற  முடியாமல்   மக்கள்  அல்லல்   பட்டுக்கொண்டும்   விலைவாசி    உயர்ந்து    கொண்டும்   போகும்    நடப்புப்   பொருளாதாரச்  சூழலில்     பேருந்து   கட்டணத்தை   உயர்த்துவது  சரியாகாது.

“கூடுதல்   சம்பளம்  கொடுப்பதால்     விபத்துகள்   குறையும்   என்பதற்கு    எந்த  உத்தரவாதமும்   இல்லை”,  என   அச்சங்கத்தின்   தலைவர்   அமர்ஜிட்  சிங்   ஓர்    அறிக்கையில்   கூறினார்.

கூடுதல்  சம்பளம்   கொடுத்தால்   பேருந்து   ஓட்டுனர்கள்   அடிக்கடி   பயணத்தில்  ஈடுபட   மாட்டார்கள்  என்பதல்ல.

ஓட்டுனர்கள்   எத்தனை   தடவை   பயணத்தில்    ஈடுபடுகிறார்கள்   என்பதை   பேருந்து    நிறுவனங்கள்   கவனிக்க    வேண்டும்.

“ஒரு   நாளில்  இத்தனை   மணி  நேரம்தான்    பேருந்து   ஓட்டலாம்   என்பதற்கு   வரைமுறை    இருக்க   வேண்டும்.  ஒரு   நாளைக்கு    எட்டு   மணி   நேரம்   ஓட்டலாம். இடையில்   இரண்டு   மணி   நேரம்  இடைவெளி   இருத்தல்    வேண்டும்”,  என  மகானோஸ்     தலைவர்   கூறினார்.