வெளிநாடுகளில் வேலை செய்யும் மலேசியரும் இபிஎப்-பில் சேரலாம்

epfவெளிநாடுகளில்  வேலை   செய்யும்  மலேசியர்கள்   1மலேசியா  பணிஓய்வுச்  சேமிப்புத்   திட்ட(எஸ்பி1எம்)த்தின்வழி     ஊழியர்   சேமநிதிக்குச்  சந்தா    செலுத்திச்   சேமிக்க   முடியும்.

55வயதுக்குக்  கீழ்ப்பட்டவர்கள்  இபிஎப்    சந்தாதாரராக     தங்களைப்   பதிவு    செய்து  கொண்டு   பணிஓய்வு   பெறும்   வரையில்   சந்தா    செலுத்தி   வரலாம்   என   ஜோகூர்   இபிஎப்   கிளை   பணி ஓய்வு      ஆலோசக   அதிகாரி    பைசல்   அபு  அல்- அஸ்ஹாரி    கூறினார்.

“இது   வெளிநாட்டில்    வேலை     செய்யும்   மலேசியர்கள்   இபிஎப்பில்   சேமிக்க   முடியாது     என்ற   தப்பெண்ணத்தைப்   போக்குகிறது.  உண்மையில்   அவர்கள்  இபிஎப்-பில்   சேமிக்க   முடியும்.

“சுயதொழில்  செய்வோரும்   நிலையற்ற   வருமானத்தைக்   கொண்டோரும்     தாங்களால்   இயன்ற   அளவைச்   சேமிப்பதை   ஊக்குவிக்கக்   கொண்டு   வரப்பட்ட   திட்டம்தான்   எஸ்பி1எம்.  வெளிநாட்டில்   வேலை   செய்யும்    மலேசியரும்   அதன்வழி    சேமிக்கலாம்”,  என்றவர்  பெர்னாமாவிடம்    தெரிவித்தார்.