கிறிஸ்துமஸ் தினத்தன்று பத்து சாக்லைடைத் திருடிய நான்கு குழந்தைகளின் தாயாருக்கு இன்று கோலாலம்பூர் மஜிஸ்டிரேட் நீதிமன்றம் 14 நாள் சிறைத் தண்டனையும் ரிம200 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அபராத்தொகையைக் கட்டத் தவறினால் கூடுதல் நாங்கு நாள் சிறைத் தண்டனைக்கும் உத்தரவிட்டது.
இத்தீர்ப்பை அளித்த மஜிஸ்டிரேட் உம்ஸாருல் அந்-நுர் ஒமார் குற்றவாளி ஸாரியா முகமட் சாலேயின் சிறைவாசம் சாக்லைட்டைத் திருடிய டிசம்பர் 25 ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்று கூறினார்.
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ஸாரியா நான்கு குழத்தைகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்புடைய தமக்கு குறைந்தபட்ச தண்டனை அளிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
ஸாரியா தண்டனைச் சட்டத் தொகுப்பு செக்சன் 380 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். இச்சட்டப் பிரிவு அதிகபட்சமாக 10 ஆண்டுகால சிறைத் தண்டனைக்கும் அபராதத்திற்கும் வகைசெய்கிறது.