இபிஎப் அதன் சந்தாதாரர்கள் அவர்களின் சேமிப்பை விரைவில் கரைத்து விடுவார்களோ என்று அஞ்சுகிறது

epfஊழியர்  சேமநிதி (இபிஎப்)   அதன்   சந்தாதார்ளை   எண்ணிக்    கவலையடைந்துள்ளது.  அவர்களின்  செலவளிக்கும்  பழக்கம்தான்   அதற்கு  கவலை   தந்துள்ளது.

மலேசியர்களின்   வாழ்நாள்   இப்போது   75ஆண்டுகளாகக்   கூடியுள்ளது  ஆனால்,  சந்தாதாரர்கள்   பலர்   பணியிலிருந்து  ஓய்வுபெற்ற   மூன்றிலிருந்து   ஐந்து   ஆண்டுகளுக்குள்  இபிஎப்   சேமிப்பை  முடித்து   விடுகிறார்கள்    எனக்  கோலாலும்பூர்   இபிஎப்   கிளையின்   பணிஓய்வு   ஆலோகச்  சேவை(ஆர்ஏஎஸ்)ப்  பிரிவு    அதிகாரி   நோர்நிஷா   முகம்மட்  யூசுப்   கூறினார்.

“மிகவும்    கவலையளிக்கும்   விசயம்     என்னவென்றால்,   பணி ஓய்வு  பெறும்  சிலர்   சேமிப்பிலிருந்து    70விழுக்காட்டுப்   பணத்தை  எடுத்து    30  நாள்களுக்குள்   செலவளித்து   முடித்து  விடுகிறார்கள்”,  என்றவர்  பெர்னாமாவிடம்    தெரிவித்தார்.

எனவே  இபிஎப்  சந்தாதாரர்கள்,   குறிப்பாக    பணிஓய்வு  பெறுவோர்  முதிய   வயதில்   சிரமப்படாதிருக்க    செலவுகளை   நன்கு  திட்டமிட்டுச்  செய்ய   வேண்டும்.

“ஆலோசனை   அல்லது  விளக்கம்  பெற  விரும்புவோர்,  இபிஎப்  அலுவலகங்களில்   உள்ள   ஆர்ஏஎஸ்   அதிகாரிகளை   அணுகலாம்”,  என்றாரவர்.