ஸுனார்மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிடுவீர்: அரசாங்கத்துக்கு ஆர்எஸ்எப் கோரிக்கை

rsfஅரசாங்கம்  அரசியல்   கேலிச்சித்திர   ஓவியரான   சுல்கிப்ளி   அன்வார்   அல்ஹாஹ்   மீதான   எல்லாக்  குற்றச்சாட்டுகளையும்     கைவிட    வேண்டும்   என   எல்லைகளற்ற    செய்தியாளர்கள்   அமைப்பு (ஆர்எஸ்எப்)   விரும்புகிறது.

பாரிசில்   அமைந்துள்ள    அந்த   என்ஜிஓ,    அரசாங்கம்   தேச  நிந்தனைச்   சட்டத்தைக்  காண்பித்து   ஸுனார்     என்ற  பெயரில்   பிரபலமாக    விளங்கும்   சுல்கிப்ளியை   மிரட்டவோ  அச்சுறுத்தவோ   கூடாது  என்று     குறிப்பிட்டது.

“கேலிச்சித்திர   ஓவியருக்கு   எதிரான    எல்லாக்   குற்றச்சாட்டுகளையும்   உடனடியாக,    நிபந்தனைகளற்ற   முறையில்    மீட்டுக்  கொள்ள  வேண்டும்    என்றும்    தேசிய   நிந்தனைச்   சட்டத்தைக்  கொண்டு    செய்தியாளர்களை   மிரட்டவும்    அச்சுறுத்தவும்   வேண்டாம்   என்றும்    மலேசிய     அதிகாரிகளைக்  கேட்டுக்கொள்கிறோம்”,  என    ஆர்எஸ்எப்    தலைமை   செய்தியாசிரியர்    விர்ஜினி   டேங்கல்ஸ்    ஓர்     அறிக்கையில்    கூறினார்.