பேருந்து விபத்துகளைத் தடுக்க யூனியன் ஆலோசனை

crashபேருந்து,  லாரி    போக்குவரத்து     நிறுவனங்கள்      ஓட்டுனர்களின்     வேலை       முறையை    மாற்றி  அமைக்க   வேண்டும்,  லாரி,  பேருந்து   விபத்துகளைத்   தவிர்க்க    அதுதான்     வழி    என  தீவகற்ப    மலேசியா    போக்குவரத்து   தொழிலாளர்  சங்கம்  (TWU) கூறியது.

TWU பல  தடவை    இந்த   ஆலோசனையை   முன்வைத்தது     என்றும்    ஆனால்,  சம்பந்தப்பட்ட     தரப்புகள்   அதைக்  கவனத்தில்    கொண்டதில்லை   என   அத்தொழிற்சங்கத்தின்    தலைமைச்    செயலாளர்    சைனல்   ரம்பாக்   கூறினார்.

கடந்த    சனிக்கிழமை,  ஜோகூர்,   பாகோவில்     14பேர்   பலியான    விரைவுப்   பேருந்து   விபத்து     குறித்துக்   கருத்துரைத்த   சைனல்,  பேருந்து  மற்றும்   லாரி   நிறுவனங்கள்    ஓட்டுனர்களுக்கு   ‘கமிசன்’   கொடுக்கும்   முறையை    நிறுத்த   வேண்டும்  என்றார்.

அதன்   காரணமாக    குறைந்த   வருமானம்   பெறும்  ஓட்டுனர்கள்   முடிந்தவரை  கூடுதல்    கமிசன்    பெறுவதற்காக   பல  பயணங்களை   மேற்கொள்ளும்   கட்டாயத்துக்கு    ஆளாகிறார்கள்.  போதுமான   ஓய்வுகூட    எடுப்பதில்லை.

“எனவே,  லாரி,  விரைவு   பேருந்து     நிறுவனங்கள்,  ஓட்டுனர்களின்   சம்பளத்தை   உயர்த்திக்  கொடுத்து     அவர்களின்   கவனம்   ஓட்டுவதில்   மட்டும்   இருப்பதை   உறுதிப்படுத்த    வேண்டும்.  அதுதான்   பயணிகளுக்கும்    சாலையைப்  பயன்படுத்தும்   மற்றவர்களுக்கும்   பாதுகாப்பாக   இருக்கும்”,  என  சைனல்   ஓர்    அறிக்கையில்   கூறினார்.