ஐவர் கைது, ரிம100,000 மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

polisகடந்த   சனிக்கிழமை,  ஸ்ரீபெட்டாலிங்கில்   இரண்டு   கொண்டோமினியம்களில்   நடத்திய   அதிரடிச்  சோதனையில்   ஐவரைக்  கைது    செய்து    இரண்டு  கிலோகிராம்   போதைப்பொருளைக்  கைப்பற்றியதன்வழி    போதைப்பொருள்  விநியோகக்    கும்பல்  ஒன்றை     போலீசார்  முறியடித்துள்ளனர்.

அக்கும்பல்   கூட்டரசுத்    தலைநகரிலும்   அதனைச்   சுற்றியுள்ள   பகுதிகளிலுமுள்ள   கேளிக்கை   மையங்களில்   போதைப்பொருள்களை   விற்று   வந்ததாக   நம்பப்படுகிறது     என   கோலாலும்பூர்   போலீஸ்   துணைத்    தலைவர்   அப்துல்    ஹமிட்   முகம்மட்   அலி   நேற்று   கூறினார்.