பாஸ்: அமனாவின் சாயம் வெளுத்து விட்டது, அது பிகேஆரின் தொகுதிகளைக் கவர நினைக்கிறது

pasஅமனா   நெகரா(அமானா) வின்   சாயம்   வெளுத்து  விட்டது    என்று   கூறும்   பாஸ்   அது     பிகேஆரின்     தொகுதிகளை   எடுத்துக்கொள்ளப்   பார்ப்பதிலிருந்தே    இதைத்    தெரிந்து  கொள்ளலாம்  என்கிறது.

“அவர்கள்(அமனா)   இப்போது  பிகேஆரின்    தொகுதிகளை  அபகரிக்க   நினைக்கிறார்கள்.  இது   நாங்கள்   அமனா  குறித்து   சொல்லியதெல்லாம்   உண்மை   என்பதை   நிரூபிக்கிறது”,  என   பாஸ்   உதவித்   தலைவர்   இஸ்கண்டர்  சமட்   கூறினார்.

“அவர்களும்  ஹராபானில்   இருக்கிறார்கள்.  ஆனாலும்  அவர்களின் (பிகேஆரின்)  தொகுதிகளை   எடுத்துக்கொள்ளப்   பார்க்கிறார்கள்….”, என  இஸ்கண்டர்   கோலாலும்பூரில்    பாஸ்     தலைமையகத்தில்     கூறினார்.

அமானாவை   நம்பிக்கைத்   துரோகி   என்றாரவர்.  இது  அமனா  பற்றி   பாஸ்    தொடர்ந்து    கூறிவரும்   ஒரு   குற்றச்சாட்டு.

நேற்று   அமனா   தகவல்   தலைவர்   காலிட்   சமட்     ஓர்    அறிக்கையில்    அடுத்த   பொதுத்    தேர்தலில் ,    வழக்கமாக    பாஸ்    களமிறங்கும்   இடங்களிலும்    பிகேஆர்   தொகுதிகள்   சிலவற்றிலும்    ஆக  மொத்தம்    40   தொகுதிகளில்   அமனா  போட்டியிடும்   என்று   கூறியிருந்தது   குறித்துக்   கருத்துரைத்தபோது    இஸ்கண்டர்    அவ்வாறு   கூறினார்.