பெர்சத்து தலைவர்: பிரதமராவதற்கு முழுத் தகுதி பெற்றவர் முகைதின்

cndidate pmபார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியா (பெர்சத்து)வின்  உயர்   தலைவர்களில்    ஒருவர்,    அடுத்த   பொதுத்   தேர்தலில்   எதிரணி   புத்ரா  ஜெயாவைக்   கைப்பற்றினால்   அக்கட்சித்    தலைவர்   முகைதின்   யாசினே    பிரதமராவதற்கு   மிகவும்   பொருத்தமானவர்    என்கிறார்.

“எனக்கு  முகைதினை   நன்றாகத்    தெரியும்.  பிரதமராவதற்கு    முழுத்    தகுதி    அவருக்கு   உண்டு”,  என்றவர்   மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.  அவர்  தம்மை   அடையாளப்படுத்திக்கொள்ள    விரும்பவில்லை.

முன்னாள்   துணைப்   பிரதமர்   மணமான  ஒரு   பெண்ணுடன்   தொடர்பு  வைத்திருந்ததாகக்   கூறப்படுவது    குறித்து    வினவியதற்கு, “அது   வெறும்   குற்றச்சாட்டுத்தான்.  அது   பெரிய  பிரச்னையாக   இருக்காது”,  என்றாரவர்.