டெப்பி ரெய்னோல்ட்ஸ், 84, மகள் கேரி ஃபிஷருக்கு அடுத்த நாள் காலமானார்

debbieஹாலிவூட்டில்   ஒரு  காலத்தில்   கொடிகட்டி   பறந்த     நடிகை    டெப்பி   ரெய்னோல்ட்ஸ்    நேற்று   காலமானார்.  அவருக்கு   வயது  84.

லோஸ்   ஏஞ்சலிஸ்    நகரில்   திடீரென்று    முடக்கு   வாதத்தால்   தாக்கப்பட்டு   மருத்துவமனைக்குக்   கொண்டு   செல்லப்பட்ட   ரெய்னோல்ட்ஸ்   சில  மணி   நேரத்தில்   இறந்தார்   என    அவரின்   மகன்   டோட்   ஃபிஷர்    தெரிவித்தார்.

‘Singin’ In the Rain’  என்ற  திரைப்படம்   ரெய்னோல்ட்ஸைப்  புகழின்   உச்சிக்குக்   கொண்டு    சென்றது.  அதன்   பின்னர்   பல   வெற்றிப்  படங்கள்.  ஜீன்  கெல்லி,  ஃப்ரேங்   சினாட்ரா,  டோனி   கர்டிஸ்,  டோனல்ட்  ஓ’கோனர்   போன்றோருடன்   இணைந்து   நடித்துள்ளார்  அவர்.

ரெய்னோல்ட்ஸ்   இறப்பதற்கு   ஒரு   நாள்   முன்னதாகத்தான்    அவரின்  மகள்    ‘ஸ்டார் வார்ஸ்’  திரைப்படத் தொடரில்  ‘இளவரசி லியா’ என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த   நடிகை கேரி ஃபிஷர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60