விரைவு பேருந்து ஓட்டுனர்கள் மீதான புகார்களை வரவேற்கிறது ஸ்பாட்

spadவிரைவு   பேருந்து   பயணிகள்   ஓட்டுனர்   தவறு   செய்வதைக்   கண்டால்   நேரடியாக   தன்னைத்   தொடர்பு   கொண்டு   முறையிடுவதை    நிலப்   போக்குவரத்து    ஆணையம் (ஸ்பாட்)   ஊக்குவிக்கிறது.

ஸ்பாட்டின்    தொலைபேசி    எண்    எல்லா    விரைவு   பேருந்துகளிலும்   இருக்கும்.  24-மணி   நேரமும்    தொடர்புகொண்டு   புகார்களைத்    தெரிவிக்கலாம்   என    ஸ்பாட்   பொது   நிர்வாகி (அமலாக்கப்   பிரிவு)  சே  ஹஸ்னி   சே   அஹமட்    கூறினார்.

“பயணிகள்  என்ன,   எங்கே,   எப்போது,  எப்படி   நிகழ்ந்தது   என்ற   விவரத்தைத்     தெரிவிக்க   வேண்டும்”.

ஸ்பாட்   உடனடியாக    நடவடிக்கை    எடுக்கும்   என்று   சே  ஹஸ்னி   உறுதி   அளித்தார்.