சாபா குடிநீர்துறை ஊழல்: குற்றச்சாட்டுகளை மறுத்த மூவர்

cashசாபா   குடிநீர்துறை   முன்னாள்  இயக்குனரும்   அவரின்   துணைவியாரும்,  மாநில   நிதி   அமைச்சின்    தொழில்நுட்ப,   பொறியியல்    ஆலோசகரும்    இன்று  கோத்தா   கினாபாலு  செசன்ஸ்   நீதிமன்றத்தில்    ரிம61.48  மில்லியனைக்  கையாடியதாகவும்   ஆடம்பரப்   பொருள்களைச்  சட்டவிரோதமாக    வைத்திருந்ததாகவும்       அவர்களுக்கு   எதிராக  சுமத்தப்பட்ட    குற்றச்சாட்டுகளை   மறுத்தனர்.

54 வயது  நிரம்பிய   முன்னாள்   இயக்குனர்   முகம்மட்  தாஹிர்   முகம்மட்  தாலிப்,   அடிப்படைக்   கட்டுமான   நிதியான    ரிம56. 9 மில்லியனைக்   கையாடியதாகவும்    விலைமதிப்புள்ள   கைக்கடிகாரங்களையும்   வாகனங்களையும்   சட்டவிரோதமாக    வைத்திருந்ததாகவும்   சுமத்தப்பட்ட  12  குற்றங்களை   மறுத்தார்.

மேலும்,   நகைகளைச்  சட்டவிரோதமாக    வைத்திருந்ததாக   அவர்மீதும்    அவரின்  மனைவி   பவுசியா   பியுட்மீதும்   சுமத்தப்பட்ட   குற்றச்சாட்டையும்    அவர்   மறுத்தார்.  பவுசியா   மீது    நகைகளையும்   ஆடம்பர  கைப்பைகளையும்     பல்வேறு   வங்கிகளில்     அவருடைய   பெயரில்   ரிம2.2   மில்லியன்   பணத்தையும்     சட்டவிரோதமாக   வைத்திருந்ததாக  மொத்தம்     19  குற்றச்சாட்டுகள்   சுமத்தப்பட்டன.

தொழில்நுட்ப,  பொறியல்   ஆலோசகராக   இருந்த    லிம்   லாம்   பெங், 62,  அவருடைய  பதவியிலிருந்து   இடைநீக்கம்     செய்யப்பட்டுள்ளார்.   அவரும்    மொத்தம்   ரிம2.38  மில்லியன்  ரொக்கம்  வைத்திருந்ததாகவும்   சட்டவிரோதமாக   ஒரு   வாகனத்தை   வைத்திருந்ததாகவும்   சுமத்தப்பட்ட   மூன்று   குற்றச்சாட்டுகளை  மறுத்தார்.

-பெர்னாமா