பிரிம் ஒருவகையான இலஞ்சம்தான், மகாதிரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறார் அஸ்மின்

 

AzminagreeswithMமத்திய அரசு அமல்படுத்தும் பந்துவான் ரக்யாட் 1 மலேசியா (பிரிம்) ஒரு வகையான இலஞ்சம் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் கூறியிருந்த கருத்தை பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி ஏற்றுக்கொள்கிறார்.

என்னைப் பொறுத்தவரையில் பிரிம் ஒரு வகையான இலஞ்சம். இதனை தாம் பல தடவைகளில் கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலஞ்சத்தை பல வடிவங்களில் கொடுக்கலாம். ஏனென்றால் அது பொருளாதார உதவி (அப்படி சொல்லப்படுகிறது) என்றால், அது (பிரிம்) மக்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கவில்லை என்று அஸ்மின் ஷா அலாம் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு வெளியில் இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறினார்.

அஸ்மின் கூறிய இக்கருத்து பிகேஆர் தலைவர் வான் அசிஸா வான் இஸ்மாயில் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்மாறானதாக இருக்கிறது. மகாதிரின் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த வான் அசிஸா, அரசாங்கம் அளிப்பதை ஏற்றுக்கொள்வது மக்களின் உரிமை என்று கூறியிருந்தார்.

அஸ்மின் கூறிய கருத்து பிகேஆர் தலைவரின் கருத்துக்கு முரணானதாக இருப்பதை அவரிடம் சுட்டிக்காட்டிய போது, அவர் எந்தப் பின்னணியில் அவ்வாறு கூறினார் என்பதைக் கவனிக்க வேண்டும். கெஅடிலான் தலைவரை குறைகூறுவது நியாயமல்ல என்றார் அஸ்மின்.

“பிரிம் புத்ராஜெயா நடைமுறைப்படுத்தியிருக்கும் ஒரு வகையான இலஞ்சம் என்று விளக்கம் அளித்துள்ளேன்”,என்று அஸ்மின் மேலும் கூறினார்.

இவ்வார தொடக்கத்தில், பிரிம் ஒரு வகையான “இலஞ்சம்” என்ற அவரது குற்றச்சாட்டை மகாதிர் மீண்டும் கூறியதோடு அது “சட்ட விரோதமானது” என்றும் கூறிக்கொண்டார்.