ரோன்95 விலை ரிம2.20 ஐ எட்டும், ரஃபிஸி மீண்டும் எச்சரிக்கிறார்

 

Rontogoupரோன்95 பெட்ரோலின் விலை ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து ஒரு லீட்டருக்கு ரிம2.20க்கு உயரக்கூடும் என்று பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி அவரது எச்சரிக்கையை மீண்டும் விடுத்துள்ளார்.

ஒரு லீட்டருக்கு 25 சென் விலை உயர்வு கீழ் மற்றும் நடுத்தர வருமான வட்டத்திலுள்ள குடும்பங்களுக்கு மிகப் பெரிய சுமையாக, குறிப்பாக தங்களுடைய குழந்தைகளின் பள்ளிச் செலவை சந்திக்க வேண்டிய இந்நேரத்தில், இருக்கும் என்றாரவர்.

இந்த விலை ஏற்றம் குறித்து கடந்த டிசம்பர் 20 இல் ரஃபிஸி எச்சரிக்கை விடுத்திருந்தார். விலை ஏற்றத்தைச் சமாளிக்க அடுத்த ஆண்டில் அரசாங்கம் உதவித் தொகை அளிப்பது பற்றி என்ன நடவடிக்கை எடுக்கும் என்று கூறுமாறு பிரதமர்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாலானை அவர் கேட்டிருந்தார்.