அமெரிக்காவில் அடைக்கலம் நாடும் சிங்கப்பூரர், சொந்த நாட்டில் இட்ட இடுகைகளுக்காக வருந்துகிறார்

amosஅமெரிக்காவில்   அரசியல்   அடைக்கலம்    நாடும்   சிங்கப்பூரர்   ஒருவர்    சொந்த   நாட்டில்   வெளியிட்ட  இடுகைகளை    நினைத்து    இப்போது    வருந்துகிறார்.  மக்களிடையே  கொதிப்பை   உண்டாக்கும்   அவ்விடுகைகளை   வெளியிட்டதற்காக   இரண்டு  முறை  சிங்கையில்    சிறை  வாசம்   அனுபவித்திருக்கிறார்  அவர்.

தற்போது    அமெரிக்காவின்    இல்லினோய்சில்      தடுத்து  வைக்கப்பட்டிருக்கும்    அமோஸ்  ஈ, 18,  சிங்கப்பூரின்  காலஞ்சென்ற   பிரதமரையும்  பல்வேறு  சமயங்களையும்    அவமதிக்கும்    வகையில்   காணொளிகளைப்   பதிவிட்டு  வந்திருப்பதாக    ராய்ட்டர்சிடம்   தெரிவித்தார்.

“அப்படிப்பட்ட   காணொளிகளை   வெளியிட்டதற்காக   மனமார   வருந்துகிறேன்”,  என்றாரவர்.