மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு (Bahagian Operasi Khas) அதிகாரிகள் அறுவர் அப்பிரிவிலிருந்து மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே எஸ்ஆர்சி இண்டர்நேசனல் புலனாய்வில் நேரிடையாக ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அறுவரில் அப்பிரிவின் துணைத் தலைவர் டான் காங் சாயும் ஒருவர் என்று அறியப்படுகிறது.
சிறப்புப் பிரிவு ரிம1 மில்லியனுக்கு மேற்பட்ட ஊழல்களை விசாரிப்பதற்காக 2010-இல் அமைக்கப்பட்டது.