திரெங்கானுவில் வெள்ளம் மோசமடைகிறது

floodதிரெங்கானுவில்  நேற்றிரவு   பத்து   மணிக்கு   3,292ஆக   இருந்த   வெள்ள  அகதிகளின்  எண்ணிக்கை   இன்று   காலை   மணி   8க்கு   4,062 ஆக   உயர்ந்தது.

நேற்றிரவு    மேலும்   ஒன்பது  துயர்த்துடைப்பு   மையங்கள்   திறக்கப்பட்டதாக   மாநில   நலவளர்ச்சித்   துறை    அகப்பக்கம்    தெரிவித்தது.  அவற்றையும்     சேர்த்து    இன்று   காலை   8மணி  முடிய   மொத்தம்   52  மையங்கள்   செயல்பட்டுக்   கொண்டிருந்தன.

நேற்று   பெருகிய   வெள்ளத்தால்   1,244   குடும்பங்கள்   பாதிக்கப்பட்டதாக  திரெங்கானு    நலவளர்ச்சித்  துறை   இடைக்கால    இயக்குனர்  ருஸ்மி   முகம்மட்   பெர்னாமா  தொடர்பு   கொண்டபோது   கூறினார்.

மிகவும்   பாதிக்கப்பட்ட   மாவட்டம்   ஹுலு   திரெங்கானு.   அங்கு   789    குடும்பங்களைச்   சேர்ந்த    2,268  பேர்     துயர்த்துடைப்பு    மையங்களுக்கு   அப்புறப்படுத்தப்பட்டனர்  என்றாரவர்.