கோல்ப் விளையாட வெளிநாடு செல்லாதீர்: அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்து

maccஅரசாங்க    அதிகாரிகள்,   குறிப்பாக    உயர்    பதவியில்   இருப்பவர்கள்   கோல்ப்  விளையாடுவதற்காக    வெளிநாடுகளுக்குச்   செல்வதை    நிறுத்த    வேண்டும்     என    மலேசிய    ஊழல்தடுப்பு    ஆணைய(எம்ஏசிசி)    தலைவர்    சுல்கிப்ளி   அஹமட்     கேட்டுக்  கொண்டிருக்கிறார்.

“அரசு   அதிகாரிகள்  கோல்ப்    ஆடுவதற்காக   இந்தோனேசியா,   தாய்லாந்து   போன்ற    நாடுகளுக்குச்   செல்ல    வேண்டியதில்லை.

“அவர்கள்  ஒன்றும்   தொழில்முறை    கோல்ப்    ஆட்டக்காரர்கள்   அல்லர்.  அதனால்  கோல்ப்   விளையாடுவதற்காக     வெளிநாடு    செல்ல    வேண்டிய    அவசியமில்லை. ”,  என்றவர்    உத்துசான்   மலேசியா   வழங்கிய   நேர்காணல்   ஒன்றில்   கூறினார்.

மலேசியாவிலேயே    நிறைய   கோல்ப்    திடல்கள்    இருக்கின்றன.

வெளிநாடுகளில்   இருக்கும்போது    தன்னல   அக்கறை   கொண்டவர்கள்    அவர்களை   அணுகி    காரியங்களைச்   சாதித்துக்கொள்ள    முற்படலாம்    என்று   சுல்கிப்ளி    கூறினார்.

அரசியல்வாதிகள்மீது    புலனாய்வு  நடத்த    எம்ஏசிசி   அஞ்சுவதில்லை    என்றும்    அவர்  சொன்னார்.

அது   பயப்படுவதாக    சில   தரப்பினர்   தப்பாக   சொல்லி   வருகிறார்கள்    என்றாரவர்.

“ஒருவர்    ஊழலில்    சம்பந்தப்பட்டிருப்பது    விசாரணைகளில்     தெரிய    வந்தால்,   போதுமான      ஆதாரங்களும்   இருந்தால்,  அவருடைய  பதவி,   அவர்   சார்ந்துள்ள   அரசியல்    கட்சி     ஆகியவற்றையெல்லாம்    பாராமல்   எம்ஏசிசி   நடவடிக்கை     எடுக்கும்”,  என்றார்.

ஊழலுக்கெதிரான    போராட்டத்தில்   “சிறிய  மீன்”   அல்லது   “சுறாமீன்”    என்றெல்லாம்    பார்ப்பதில்லை  என்று      எம்ஏசிசி    தலைவர்   கூறினார்.