சீனப்பள்ளிகளுக்கு நிதி: புத்ராஜெயாவுக்கு கடன் கொடுக்க பினாங்கு அரசு முன்வந்துள்ளது

 

Loantoputrajayaபினாங்கு மாநில அரசு புத்ராஜெயாவுக்கு ரிம50 மில்லியன் கடன் கொடுக்க இன்று இரண்டாவது முறையாக முன்வந்துள்ளது.

நிதி பற்றாக்குறையினால் சீனமொழிப்பள்ளிகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரிம50 மில்லியனை கல்வி அமைச்சு முடக்கியுள்ளது.

பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் மாநில அரசு 2008 ஆம் ஆண்டிலிருந்து உபரி வரவு செலவுத்திட்டத்தைக் கொண்டிருப்பதால் அதனிடம் உபயோகப்படுத்தாத ரொக்கம் இருக்கிறது என்று கூறினார்.

சீனப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ரிம50 மில்லியனை கொடுக்க முடியாத அளவிற்கு மத்திய அரசு அவ்வளவு ஏழ்மையில் இருக்கிறதா என்று அவர் வினவினார்.

2017 ஆம் ஆண்டு முழு வரவு செலவுத்திட்டம் ரிம261 பில்லியன் ஆகும். அதில் ரிம50 மில்லியன் அல்லது 0.02 விழுக்காடு நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசால் கொடுக்க முடியவில்லை என்றால் அதில் ஏதோ பெரும் தவறு இருப்பதோடு அது வெட்கக்கேடானதாகும் என்று லிம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.