நூருல் ஜஸ்லான்: அரசு ஜெட் விமானத்தைப் பயன்படுத்தும் உரிமை பிரதமருக்கு உண்டு

 

Najibentitiledபிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் ஆண்டு-இறுதி விடுமுறையைக் கழித்தனர். அதற்கு அரசாங்க ஜெட் விமானத்தை நஜிப்பும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்தியதை துணை உள்துறை அமைச்சர் தற்காத்துள்ளார்.

நஜிப் பிரதமர் என்ற முறையில் அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறார் என்பது பலருக்குத் தெரியாது என்று ஜஸ்லான் தெரிவித்தார்.

“பிரதமர் என்ற முறையில் அது அவரது முழு உரிமைக்குட்பட்டது”, என்று ஜஸ்லான் இன்று மலேசியாகினியுடனான நேர்காணலில் கூறினார்.