எம்எசிசி அமைச்சின் தலைமைச் செயலாளரை கைது செய்துள்ளது

 

maccarrestsஊழல் குற்றத்திற்காக “டத்தோக்” பட்டம் பெற்றுள்ள ஓர் உயர்மட்ட அரசாங்க அதிகாரியை மலேசிய இலஞ்ச எதிர்ப்பு ஆணையம் யுஎஸ்எ சுபாங் ஜெயாவிலுள்ள அவரது இல்லத்திலிருந்து கைது செய்துள்ளது என்று த ஸ்டார் ஒன்லைன் செய்தி கூறுகிறது.

இலஞ்சம் பெறுவதற்காக 50 வயதான பெடரல் அமைச்சின் தலைமைச் செயலாளரான அவர் 2010 ஆம் ஆண்டிலிருந்து தமது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியுள்ளார்.

த ஸ்டார் செய்தியின்படி அந்நபர் குத்தகையாளர்கள், விநியாகஸ்தர்கள் மற்றும் விற்பணையாளர்கள் ஆகியோரின் நியமணத்தை அவரே நேரடியாகக் கையாண்டுள்ளார் என்பது துவக்க விசாரணையில் தெரியவந்துள்ளது.