ஓர் அமைச்சின் தலைமைச் செயலாளரைக் கைது செய்ததன்வழி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் அதிகாரி பாஹ்ரி முகம்மட் சின்னின் பரபரப்பூட்டும் செய்தியால் ஏற்பட்டுள்ள கவலையை – முடிவுக்குக் கொண்டு வந்துவிட முடியாது என்கிறார் பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான்..
எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லாதது மலேசியர்களுக்குத் தாம் இழைத்த மிகப் பெரிய என்று பாஹ்ரின் கூறியிருந்தது பலவாறும் நினைக்க வைத்தது. நேற்றைய கைது பாஹ்ரினின் கூற்றை வலுப்படுத்துகிறது என்று துவான் இப்ராகிம் கூறினார்.
“மலேசிய உழல்தடுப்பு ஆணையத்தால் அரசு அதிகாரிகளை எளிதாகக் கைது செய்ய முடிகிறது, ஆனால் உயர் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட எஸ்ஆர்சிக்கு எதிராக எதுவும் செய்ய முடியாதது ஏன்?
“பாஹ்ரி முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையாயின் எஸ்ஆர்சி வழக்கு (நீதிமன்றம் செல்வதைத்) தடுத்தது யார்?….தலைமைச் செயலாளரைக் கைது செய்ய பச்சைக் கொடி காட்டியது யார்?”, என துவான் இப்ராகிம் ஓர் அறிக்கையில் வினவினார்.
ஊழல்தடுப்பு ஆணைத்துக்கு நெத்திலிபொடி
தான்மாட்டிக்கிச்சி சுறாகிட்ட போனால்கோற
பற்களால் கடித்துதிண்ணுடுங்கோ.